பத்தொன்பதாவது ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது நாளை நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பத்திராணாவை திரும்ப வாங்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
மேலும் பத்திராணா அதிகபட்சமாக கொல்கத்தா அனிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதனால் சென்னை அணியில் செல்லப் பிள்ளையாக திகழ்ந்த பத்திரனா இந்த முறை கொல்கத்தா அனைத்து விளையாடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பத்திரனா நிச்சயமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்வார். ஏனென்றால் அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடும் போது பயிற்சியாளராக பிராவோ இருந்தார். இப்போது பிராவோ கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருப்பதால் அவர் அந்த அணிக்கு சென்று விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் கொல்கத்தா முஸ்தபிஷுர் ரஹ்மானுக்கு செல்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று அவர் கூறியிருக்கிறார்.

