டி20 உலக கோப்பை.. இந்த அணிகள் அரை இறுதிக்கு வரும்.. பைனல்ல இந்தியா கூட இவங்கதான் மோதுவாங்க – ஸ்ரீகாந்த் கருத்து

அடுத்த சில நாட்களில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு எந்த அணிகள் வரும் என்பது குறித்து தனது கணிப்பை இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பில் ஆசிய அணியாக இந்தியா மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகளில் இருந்து ஒரு அணியை கூட அவர் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

அவர் இந்தியா தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று கணித்திருக்கிறார். அதே சமயத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் தெரிவிக்கும் போது “இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரைஇறுதிக்குத் தகுதி பெறும். அதே சமயத்தில் இந்திய அணி உடன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோதும். இது ஆபத்தான ஒன்றாக இந்திய அணிக்கு இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles