நாசர் நீ கேப்டனா இருந்தப்ப 2003ல என்ன நடந்தது? அந்த கென்யா விவகாரம் ஞாபகம் இருக்கா – ஸ்ரீகாந்த் பதிலடி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசைன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பங்களாதேஷ் அணி இந்தியாவில் விளையாட முடியாது என்று கூறி வெளியேறியது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நாசர் உசைன் இந்தியாவுக்கு ஒரு நியாயமும் மற்ற நாடுகளுக்கு ஒரு நியாயத்தையும் ஐசிசி கொடுப்பதாகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் ஐசிசி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

- Advertisement -

மேலும் அதிகாரம் எப்பொழுதும் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும் எனவும், இதற்காக இந்திய ரசிகர்கள் என்னை இன்னும் நன்றாக அழு என்று விமர்சனம் செய்வார்கள் ஆனால் அது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இதற்கு ஆரம்பத்திலேயே சுனில் கவாஸ்கர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருந்தார். தற்போது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இன்னும் கூர்மையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கென்யா சென்று விளையாட முடியாது என இங்கிலாந்து சொன்னது. அப்போது கென்யா இது நியாயம் இல்லை என போராடியது. ஆனால் இங்கிலாந்து திடீரென அங்கு போக முடியாது என்று கூறி நின்று விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு புள்ளி இழப்பு ஏற்பட்டது. எனவே கென்யா அந்த உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி வந்தது. இதில் முக்கியமான விஷயம் அப்போது இங்கிலாந்து கேப்டன் நாசர் உசைன்தான். அப்போது இது குறித்து வாயே திறக்காத நாசர் உசைன், இப்போது மட்டும் ஏன் பேச வேண்டும்? இது தேவையில்லாத கருத்து” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles