ஸ்டார்க்கை நாங்கள் வாங்கியது இதற்காகத்தான்.. சோசியல் மீடியா கருத்துக்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.. கௌதம் கம்பீர் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த சீசன் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்று வரை புள்ளி பட்டியலில் முதல் இடத்திலேயே நீடித்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு முதலாவது பிளே ஆப் சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா அணி இறுதிப் போட்டியிலும் அதே சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஏற்கனவே இரண்டு முறை கௌதம் கம்பீர் தலைமையில் வென்ற கொல்கத்தா திரும்பவும் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கபட்ட பிறகு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு வாங்கியது. அவரை வாங்கிய போதே சமூக வலைதளங்களில் கேலியும், கிண்டல்களும் எழுந்தன. சென்னை அணி 25 கோடியை வீண் விரையம் செய்துள்ளது என்றும் கிரிக்கெட் வல்லுனர்களே தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் கூறியதை நியாயப்படுத்தும் வகையிலேயே ஸ்டார்க்கின் தொடக்கத்தில் சில ஆட்டங்கள் மிகவும் மோசமாக அமைந்தன.

- Advertisement -

ஆனாலும் கொல்கத்தா அணி அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்தது. பின்னர் பிளே ஆஃப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ஸ்டார்க் முக்கிய வீரர்களை வெளியேற்றி கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவரது பந்து வீச்சு உதவியின் மூலம் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. பிளே ஆப் சுற்று 2 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

தான் 25 கோடிக்கு தகுதியானவன் என்று நிருபித்த ஸ்டார்க் குறித்து கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கூறும் பொழுது
“எங்களுக்கு சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள் என்பதெல்லாம் கவலை கிடையாது. சொல்பவர்கள் ஆயிரம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது எல்லாவற்றிற்கும் எங்களால் விளக்கம் கொடுக்க முடியாது.

- Advertisement -

ஸ்டார்கின் திறமையை நாங்கள் எப்போதும் சந்தேகித்தது கிடையாது. இந்தத் தொடரில் அவர் ஒரு துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நிச்சயம் எங்களுக்கு தெரியும். அவர் குவாலிபயர் ஒன்று மற்றும் இறுதிப் போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசினார். வீரர்கள் ஜீரோ ரன்கள் எடுத்தால் விமர்சிக்கக் கூடிய அவர்கள் சதம் அடித்தாலும் பாராட்டுவார்கள் என்று தெரியும்.

இதையும் படிங்க:தோனியை கழட்டி விடும் சிஎஸ்கே.? ஐபிஎல் புதிய விதியால் சிஎஸ்கேவுக்கு நேர்ந்த சோகம்.. முழு விபரம்

அவர் என்ன மதிப்பை எங்களுக்கு சேர்க்கிறார் என்பது தானே முக்கியம் தவிர பணத்தை நாங்கள் பெரிதாக பார்ப்பது இல்லை. மேலும் தொடக்கத்தில் அவர் சுமாராக விளையாடியதற்காக நாங்கள் வருத்தப்படவும் இல்லை” என்று கௌதம் கம்பீர் தெரிவித்திருக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளித்த பிறகு தான் ஸ்டார்க் தனது இழந்த பார்மை மீட்டெடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles