எனது சம்பளம் குறித்து நிறைய கேலிப் பேச்சுகள் இருந்தது.. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கொல்கத்தா அணி வீரர் ஸ்டார்க் பேட்டி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்று கொல்கத்தா அணி வீரர் ஸ்டார்க் ஐபிஎல் தொடருக்கு திரும்பிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பந்து வீசிய கொல்கத்தா அணியினர் மிக அபாரமாக பந்துவீசி சன்ரைசர்ஸ் அணியை 113 ரன்களில் சுருட்டினார்கள். அதிலும் கடந்த பிளே ஆப் போட்டியில் இதே சன்ரைசர்ஸ் அணி எதிர்கொண்ட போது ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்து வெளியேறினார். எனவே அதனை தவிர்க்கும் வகையில் இறுதிப் போட்டியில் அபிஷேக் ஷர்மா ஸ்டார்க்கை எதிர்கொண்டார்.

- Advertisement -

ஆனால் முதல் மூன்று பந்துகளை ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசிய ஸ்டார்க் தனது ஐந்தாவது பந்தைத் துல்லியமாக ஸ்டம்ப் லைனில் வீச அபிஷேக் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்குப் பிறகு களம் இறங்கிய ராகுல் திருப்பாதி ஒன்பது ரன்களில் ஸ்டார்க்கிடமே ஆட்டம் இழந்து வெளியேறினார். லீக் போட்டிகளில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திய ஸ்டார்க் கடந்த நான்கு போட்டிகளாக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க், ஏலத்தில் எடுத்த போதே இவரது விலை குறித்து கேலிப் பேச்சுக்கள் எழுந்தது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் அவரது பந்துவீச்சு சரியாக அமையாததால் ரசிகர்கள் அவரை கேலிசெய்த வண்ணம் இருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் தனது பார்மை மீட்டெடுத்து திரும்பவும் அபாரமாக பந்து வீசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய பின்னர் ஸ்டார்க் தெரிவித்த போது
“கொல்கத்தா அணிக்கு இது ஒரு சிறந்த இரவு. எங்களிடம் ஒரு சிறந்த அணி இருந்தது. மேலும் அனைவரது பங்களிப்புகளோடு நாங்கள் ஒரு அருமையான அணியாக இருந்தோம். நாங்கள் இந்த போட்டியில் டாசை இழந்திருந்தாலும் பந்து வீச்சில் ஒரு அணியாக நன்றாக செயல்பட்டோம்.

இதையும் படிங்க:ஆரஞ்சு தொப்பியை வென்றால் மட்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.. மீண்டும் விராட் கோலி வம்புக்கு இழுக்கும் அம்பத்தி ராயுடு

இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ஆடுகளத்தின் திட்டம் குறித்து சற்று குழப்பத்தில் இருந்தோம். ஆனால் எங்களது பவுலிங் யூனிட் மிகத் திறமையாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளது. எனது சம்பளம் குறித்து நிறைய கேலிகள் இருந்தன. ஆனால் எனது அனுபவத்தின் மூலம் அதனை எளிதாக என்னால் சமாளிக்க முடிந்தது. இந்தக் கேலி பேச்சுக்கள் எல்லாமே வேடிக்கையானவை அதனால் அதை கடந்து விட வேண்டும். எங்களிடம் மிகச் சிறந்த பவுலிங் யூனிட் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக என்னால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles