கம்மின்சை சைலன்ஸ் ஆக்கிய கேகேஆர்.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்.. இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் தோல்வி

17ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் இந்த முடிவு அவருக்கே கடைசியில் மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா நான்கு பந்துகள் எதிர்கொண்ட நிலையில், ஐந்தாவது பந்தில் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ராகுல் திருப்பாதி ஒன்பது ரன்களிலும் மார்க்கம் 20 ரன்களிலும் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய நித்திஷ் ரெட்டி 13 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரர் கிளாசன் பதினாறு ரன்களிலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

இப்படி முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க சன் ரைசர்ஸ் அணி இறுதியாக 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரே ரசல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர்களில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 19 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு கொல்கத்தா அணி 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்தப் போட்டியில் சுனில் நரேன் ஆறு ரன்களில் வெளியேறினாலும், தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 39 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 52 ரன்கள் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.இதனால் இறுதியாக கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் குவித்து சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

இதையும் படிங்க:எனக்கு 25 கோடி இதுக்கு தான் கொடுத்தாங்க.. ஐபிஎல் இறுதிப் போட்டி.. பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஸ்டார்க்

ஏற்கனவே கௌதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி அதற்கு பின்னர் பத்து வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது. டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தார். தற்போது கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கி இந்த முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles