கோலி ரொம்ப நல்ல மனுஷன்.. எங்கிட்ட வந்து இதைத்தான் சொன்னாரு.. பிரச்சனைக்கு காரணம் இவங்கதான்.. நவீன் உல் ஹக் நெகிழ்ச்சி.!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் ஒன்பதாவது போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தனது முதல் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளையும் வென்று இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். டேட்டிங்கில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 131 ரன்கள் எடுத்தார். மேலும் விராட் கோலி 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நேற்றைய போட்டியின் போது ரோகித் சர்மாவின் சதம் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சு ஆகியவற்றை விட விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் ஆகியோர் கட்டியணைத்து கைகுலுக்கிக் கொண்டது கிரிக்கெட் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பேசப்பட்டது.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் மற்றும் ஆர் சி பி அணிகள் மோதிய போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரண்டு வீரர்களுக்கும் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் தனது அணி வீரருக்கு சாதகமாக கௌதம் கம்பீர் விராட் கோழியுடன் முதலில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நவீன் ஆடிய போட்டிகளில் ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை கூறி அவரை கேலி செய்தனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதும் விராட் கோலியின் பெயரை ரசிகர்கள் கூறி நவீன் உல் ஹக்கை கிண்டல் செய்தனர் அப்போது ரசிகர்களை நோக்கி கையசைத்த விராட் கோலி தங்களுக்குள் இருந்த மோதல் முடிந்து விட்டது எனவும் அவரை கிண்டல் செய்ய வேண்டாம் என்பது போல் செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடயும் விமர்சிகர்களிடையையும் மிகவும் பாராட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் உலக கோப்பையின் போது ஸ்மித்தை கேலி செய்த ரசிகர்களிடம் அவரை கேலி செய்ய வேண்டாம் அவருக்காக கைதட்டுங்கள் என விராட் கோலி கூறியது அனைவரிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய போட்டி குறித்து பேசிய நவீன் உல் ஹக்” விராட் கோலி ஒரு சிறந்த மனிதர். மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். நாங்கள் இருவரும் எங்களுக்குள் நடந்ததை மறந்து கைகுலுக்கி கொண்டோம் . இது போன்ற மோதல்களை எப்போதும் மைதானத்திற்குள் மட்டும் தான் இருக்கும் . மக்கள் தான் இதை பெரிது படுத்துகிறார்கள் சமூக ஊடகங்களில் அவர்களை பின் தொடர்பவர்களுக்கு இது தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” விராட் கோலி என்னிடம் நமக்குள் நடந்தது முடிந்து விட்டது. அதை நாம் கடந்து விட்டோம் எனக் கூறினார். நானும் ஆம் அது முடிந்து விட்டது என அவரிடம் தெரிவித்தேன். நாங்கள் கட்டியணைத்து கைகுலுக்கி கொண்டோம்” என தெரிவித்து இருக்கிறார். நேற்றைய போட்டியின் மூலம் 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலகின் மிகப்பெரிய சர்ச்சைக்கு முடிவு எட்டி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த அணி வருகின்ற திங்கள் கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது மூன்றாவது போட்டியில் விளையாட உள்ளது . மறுபுறம் இந்தியா இரண்டு வெற்றிகள் உடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles