விராட் கோலி திடீரென டெஸ்ட் ஓய்வை அறிவித்ததற்கு காரணம் இது மட்டுமே – ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்த செய்தி

அண்மையில் சில வாரங்களுக்கு முன்னர் விராட் கோலி டெஸ்ட் வடிவத்தில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு முன்னர் கேப்டன் ரோஹித் ஷர்மா வெளியேறினார், அதனைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்கள், 30 சதங்கள், 31 அரைசதங்களுடன், இந்தியாவின் நான்காவது அதிக ரன்கள் குவித்தவராக கோலி திகழ்கிறார். 2016 முதல் 2019 வரை ஆண்டு சராசரியை 55க்கு குறையாமல் சிறப்பாக விளையாடினார். 2020இல் தொலைத்த ஃபார்மை மீண்டும் ஓரளவு பிடித்தாலும் அது போதவில்லை. பழைய கோலியைப் போலா தன்னால் செயல்பட இயலவில்லை என்பது கோலிக்கே புரிந்தது.

- Advertisement -

கோலியின் டெஸ்ட் ஓய்வு பற்றி முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” கோலி தனது உள்ளுணர்வைப் பின்பற்றி முடிவெடுத்தார். கிரிக்கெட்டுக்காக அவர் பல ஆண்டுகள் நிறைய செய்துள்ளார். அவரை இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்க முடியாதது வருத்தம் தான், ஆனால் இன்னும் ஒருநாள் போட்டிகளில் காணலாம். என்னதான் டெஸ்ட்டில் ஓய்வு பெற்றாலும் அவர் பெரிய சரித்திரத்தை விட்டுச் சென்றுள்ளார. ” என்று நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், ஐ.பி.எல் மூலமாக உலகிற்கு தெரிந்த பல நட்சத்திரங்களை இனி இந்திய அணியில் காணும் நேரம் இது எனவும் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின், ஷமி ஆகியோரின் இல்லாமல் சவாலான தொடரை எதிர்கொள்ள உள்ளது. என்றாலும், ஐபிஎல் மூலம் இளம் திறமைகளுக்கு கிடைத்த வெளிப்பாடு நம்பிக்கை அளிக்கிறது. இந்திய அணியில் திறமை மிகுந்திருப்பதால், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், இங்கிலாந்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என்று டி வில்லியர்ஸ் உற்சாகப்படுத்தினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles