பும்ரா இல்லை.. நான் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும்போது.. இவரது பந்துவீச்சை வெறுக்கிறேன் – கேஎல் ராகுல் சுவாரஸ்யம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் கேஎல் ராகுல் அளித்த ஒரு பேட்டியில் வலையில் இவரது பந்துவீச்சை விளையாடுவதற்கு வெறுப்பதாக சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே ரிஷப் பண்ட் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில், குறுகிய காலத்திலேயே தனது விக்கெட் கீப்பிங் திறமையை மேம்படுத்தி அவருக்கு பதிலாக தற்போது இந்த தொடரில் இடம் பிடித்து விளையாடி வரும் கேஎல் ராகுல் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்திருக்கிறார்.

- Advertisement -

அதில் முதலில் கேஎல் ராகுல் இடம் டி20 போட்டிக்கு எந்த மூன்று வீரர்களை முதலில் தேர்வு செய்வீர்கள் என்று கேட்டபோது, அதற்கு பதில் அளித்த கேஎல் ராகுல் முதலில், இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரைத் தேர்வு செய்து மூன்றாவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனைத் தேர்வு செய்து இருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான மைதானம் என்று குறிப்பிட்ட அவர், 2021ம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் வலைப்பயிற்சியில் எந்த பந்துவீச்சாளரை விளையாடுவதற்கு வெறுப்பீர்கள் என்ற கேட்கப்பட்டதற்கு அவர் முகமது ஷமி என்று பதில் அளித்திருக்கிறார். சமி பந்து வீச்சில் விளையாடிய கேஎல் ராகுல் இதுவரை 31 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் ஷமிக்கு எதிராக கேராகுல் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க:வாசிம் அக்ரம்.. இப்படி பேசுறதுக்கு நீங்க அசிங்கப்பட வேண்டும்.. பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்க.. யுவராஜ் சிங் தந்தை ஆக்ரோஷம்

மேலும் விளையாடுவதற்கு கடினமான பந்து வீச்சாளராக இருந்தது யார்? என்ற கேள்விக்கு, பதில் அளித்த கேஎல் ராகுல் ஆப்கானிஸ்தான் அணியின் வீரரான ரஷித் கானை தேர்வு செய்திருக்கிறார். அவரது பந்துவீச்சு எதிர்கொண்டு விளையாட விற்க மிகவும் கடினமாக இருந்ததாக” தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வருகிற இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles