ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது. இதன் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை பெற்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் தொடரானது தற்போது காபா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் வெற்ற நிலையில். இந்தியா அணியானது ஃபாலோ-ஆனை தடுக்க இன்று களம் கண்டது.
இதன் மூலம், கே.எல். ராகுல் 84 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 77 எடுத்து இந்திய அணி ஃபாலோ-ஆனை தடுக்க பாடுபட்டார்கள். அதற்கு பின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபாலோ-ஆனைத் தடுக்க இந்திய அணிக்கு உதவினர்.
செய்தியாளர்களின் சந்திப்பில் கேஎல் ராகுல் கூறும் பொழுது, “20-30 ஓவர்களுக்கு அவர் பந்தை விட்டுவிட்டு முடிந்தவரை இறுக்கமாக விளையாட முயற்சிப்பதாகவும், பின்னர் பந்து பழுதாகிய பின் ஆஸ்திரேலியா அணியை பார்க்க முயற்சித்ததாகவும்; ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் பங்களிப்பையும் பாராட்டி உள்ளார் “.
பந்து வீச்சாளர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்:
கே.எல் ராகுல் கபா டெஸ்டின் 4-வது நாளுக்குப் பின் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, “வேகமான மற்றும் பவுண்டரி ஆடுகளங்களில் விளையாடுவதை நாம் பொருட்படுத்தக் கூடாது. ஆனால் முதல் 20-30 ஓவர்களில் நீங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மரியாதை கொடுத்து – பந்து விட்டு வைத்து முடிந்தவரை இறுக்கமாக விளையாட வேண்டும். பின்னர் பழைய பந்துடன் தனது முழு பலத்தை காட்ட வேண்டும் – இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான எனது திட்டம்” என்று கூறினார்.
இரு பவுலர்களும் நன்றாக விளையாடினார்கள்:
மேலும் அவர் “ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பேட்டிங் செய்யும் போது, என் கால்களுக்கு கால் உடை அணிந்து மீண்டும் பேட்டிங் செய்வதைப்பற்றியே என்னுடைய சிந்தனையில் இருந்தது, அவர்கள் ஃபாலோ ஆனை அமல்படுத்தியிருப்பார்களா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை, அடுத்தது நான் என் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். பவுலர்களாகிய ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் பங்களிப்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

