50 வருஷமாக கிரிக்கெட் பார்க்கிறேன்.. டாப் 10 சதங்களில் இதுவும் ஒன்று.. மிரண்டுபோன சுனில் கவாஸ்கர்

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 137 பந்துகளில் 4 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் சேர்த்து கடைசியில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்னாவை வைத்து கேஎல் ராகுல் தனது பூர்த்தி செய்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் ஸ்கோர் 107 ரன்களாக இருந்த போது, விராட் கோலி நடையை கட்டிவிட்டார்.

- Advertisement -

அதன்பின் டெய்லண்டர்களுடன் மட்டுமே கேஎல் ராகுல் பேட்டிங் செய்தார். ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழந்த பின் அஸ்வின், பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை எதிர்முனையில் வைத்து கொண்டு சதம் விளாசியது தான் கூடுதல் ஆச்சரியம். ஏனென்றால் எந்த வீரரும் 8 ரன்களை கூட கடந்து களத்தில் இல்லை.

- Advertisement -

அதேபோல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் அடிக்கும் 8வது சதம் இது. அதில் வெளிநாடுகளில் மட்டும் 7வது சதத்தை விளாசி இருக்கிறார். இந்த சதம் குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட்டை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். அதனால் நிச்சயமாக கேஎல் ராகுலின் இந்த சதம், இந்திய வீரர்களால் அடிக்கப்பட்ட டாப் 10 சதங்களின் பட்டியலுக்குள் செல்லும்.

ஏனென்றால் செஞ்சுரியன் பிட்சில், எந்த பேட்ஸ்மேனும் இனி நிலையாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாட முடியாது. எந்த நேரத்திலும் பால் மேஜிக் செய்யும். 2ஆம் நாளில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரையும் வைத்து விளையாடி இருக்கிறார். அதில் 95 ரன்களை கேஎல் ராகுல் எட்டிய போது, சிராஜ் ஆட்டமிழந்து வெளியேறினார். ‘

- Advertisement -

அப்போது சிக்சர் அடித்து கேஎல் ராகுல் சதம் விளாசியதை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஏனென்றால் அந்த பந்து நல்ல லெந்தில் பிட்சாகி வந்தது. அதுபோன்ற ஷாட்களை டி20 கிரிக்கெட்டில் தான் பார்க்க முடியும். அதுதான் ஆச்சரியமாக இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் திலீப் வெங்சர்கார் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசி தள்ளினார்.

4வது முறையாக களமிறங்கிய போது அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக தான் அவர் லார்ட் ஆஃப் லார்ட்ஸ் என்று கொண்டாடப்படுகிறார். அதேபோல் கேஎல் ராகுல் சென்சுரியன் மைதானத்தில் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசி இருக்கிறார். அதனால் இனி கேஎல் ராகுலை, செஞ்சுரியன் ஆஃப் செஞ்சுரியன் என்று அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles