நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த இதுவே காரணம்.. பேட்டிங்கில் அவர் இல்லாத குறையை இவர் நிரப்பி விட்டார்.. சுனில் நரேன் பேட்டி

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருக்கிறது.

- Advertisement -

கொல்கத்தா அணியில் சுனில் நரேன் இந்த போட்டியில் நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். வெற்றிக்குப் பின்னர் 2012ஆம் ஆண்டு சென்னை அணியுடன் விளையாடி இறுதிப்போட்டியை ஒருமுறை நினைவு கூர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரில் கொல்கத்தா அணிக்கு சுனில் நரேனின் பங்கு அபாரமானது. சுனில் நரேன் 15 போட்டிகளில் 481 ரன்களை குவித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். பந்துவீசிய அனைத்து போட்டிகளிலும் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இவரது வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்

- Advertisement -

ஏனெனில் கொல்கத்தா அணிக்காக கம்பீர வந்த பிறகு திரும்பவும் சுனில் நரேனை தொடக்க வரிசையில் களம் இறங்கி விளையாட வைத்தார். கம்பீர் தந்த ஊக்கத்தால் திரும்பவும் தொடக்க வரிசையில் விளையாடி அபாரமாக ரன்களை குவித்தார். அதில் ஒரு சதமும் குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து கொல்கத்தா அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார். கொல்கத்தா அணி 2012ஆம் ஆண்டு இதே சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருந்தது. திரும்பவும் 12 வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதே மைதானத்தில் இரண்டு முறை கைப்பற்றிய போதும் சுனில் நரேன் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கொல்கத்தா அணியின் வெற்றிக்குப் பிறகு சுனில் நரேன் இது குறித்து கூறும் பொழுது
“இன்று மைதானத்திற்குள் வந்ததும் 2012ஆம் ஆண்டு நாங்கள் விளையாடுவது ஒரு முறை எனக்கு நினைவு கூர்ந்தது. நான் எனது பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கின் மூலம் எனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது என்று என்னுடைய கிரிக்கெட்டை நான் ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
மேலும் பேட்டிங்கை பொருத்தவரை எனக்கு கௌதம் கம்பீர் உறுதுணையாக இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட் இடத்தை நிரப்ப குர்பாஸ் அற்புதமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:என் நண்பர் எங்களை வீழ்த்தி விட்டார்.. இந்திய மக்களின் ஆதரவு அந்த சமயத்தில் எங்களுக்கு கிடைக்காது.. தோல்விக்கு பின்னர் கம்மின்ஸ் பேட்டி

எப்பொழுதும் உங்கள் துவக்க வீரர் நல்ல இண்டென்ட்டுடன் விளையாடுவது உங்களுக்கு கை கொடுக்கும். நாங்கள் எப்பொழுதும் பந்துவீசும்போது குறைந்த அழுத்தத்துடனே பந்து வீசுகிறோம்.
எந்தவித அழுத்தமும் இல்லாமல் வீசுவதால் அதுவே விக்கெட்டுகள் வீழ்த்த முக்கிய காரணமாகவும் அமைகிறது. ஒரு பவுலிங் யூனிட் ஆக விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது அவசியமான ஒன்று. அதுவே போட்டிகளை வெற்றி பெறவும் முக்கிய காரணமாக அமைகிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles