டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இந்த மாதம் முதல் நடைபெற உள்ள நிலையில் வங்கதேச அணியை டி20 உலக கோப்பை தொடரிலிருந்து ஐசிசி நீக்கிய நிலையில் அந்த அணிக்கு ஆதரவு தரும் விதமாக பாகிஸ்தான் அணியும் இந்திய அணியுடன் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்று அறிக்கை விட்டது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடியான கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்கள் காட்டி வங்கதேச அணி டி20 போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வலியுறுத்திய நிலையில் ஐசிசி அதன் கோரிக்கையை நிராகரித்ததோடு வங்கதேச அணியை உலகக்கோப்பை தொடரிலிருந்தே விலக்கி அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு கொடுத்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய அணியுடன் மோதும் லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடவில்லை என்று அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கூறும்போது “இந்த உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுமா? என்று எனக்கு தெரியாது. ஒருவேளை இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும் சந்திக்கும் சூழல் உருவானால் அப்போதும் பாகிஸ்தான் அணி கோப்பையை திறந்து விட்டு இறுதிப் போட்டியை புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார்.

