உங்களுக்கு பிடிச்சா வரீங்க.. இல்லைன்னா வருவது இல்ல.. கேரளா கிரிக்கெட் போர்டு சாம்சன் மீது காட்டம்

உங்களுக்கு பிடிச்சா வரீங்க இல்லைன்னா வருவது இல்ல கேரளா கிரிக்கெட் போர்டு சாம்சன் மீது காட்டம்

- Advertisement -

நடந்துவரும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் சஞ்சு சாம்சன் தனது உள்ளூர் அணியான கேரளா அணிக்காக பங்கேற்கவில்லை. இதனால் கேரள கிரிக்கெட் போர்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியிட்ட சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியின் பட்டியலில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விஜய் ஹசாரே டிராபி முன்பு நடந்த சையது முஷ்டக் அலி டிராபி தொடரில் பங்கேற்ற சாம்சன் தற்போது பங்கேற்காதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் கேரள கிரிக்கெட் வாரியத்தின் KCA தலைவர் ஜார்ஜ்.

- Advertisement -

விலகிய சாம்சன் KCA விளக்கம்

“பயிற்சிக்கு வரப்போவதில்லை என்று சஞ்சு சாம்சன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இல்லாமல் வயநாட்டில் ஒரு குறுகிய முகாம் இருந்தது, சில தினங்களுக்கு மட்டுமே இருந்த பயிற்சியில் தான் அவர் இருக்க மாட்டார் என்று கருதினோம் ஆனால் அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக அவருடன் மேற்கொண்டு எந்தப் பேச்சும் நடத்தப்படவில்லை,” இவ்வாறு KCA செயலாளர் வினோத் குமார் தெரிவித்தார்.

கேரளா அணியின் முதல் போட்டிக்கு பின்பு தான் விளையாட விருப்பம் தெரிவித்தார் சாம்சன் ஆனால் கேரளா கிரிக்கெட் வாரியம் அவரை தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

“சஞ்சு சாம்சன் கடந்த இரண்டு நாட்களாக தேர்வுக்கு தயாராக இருப்பதாக எங்களிடம் கூறினார். அவரை சேர்ப்பது குறித்து நாங்கள் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை. ஹைதராபாத்தில் ஏற்கனவே ஒரு முழுக் குழு உள்ளது, இரண்டு ஆட்டங்கள் மட்டுமே விளையாடப்பட்டுள்ளன, ”என்று வினோத் குமார் தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி அணியில் சாம்சன் இல்லை

“சஞ்சு சாம்சன் அல்லது வேறு எந்த வீரராக இருந்தாலும், மதிக்கப்பட வேண்டிய ஒரு கொள்கையை KCA கொண்டுள்ளது. சஞ்சுவுக்கு அணிக்குள் வர தனி பயிற்சி தேவையில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவர் விரும்பும் போது மட்டுமே அவர் இஷ்டம் போல வந்து விளையாட கேரள அவர் அணியா? சாம்சன் எப்படி இந்திய அணியை அடைந்தார், அது KCA மூலம் மட்டுமே. நீங்கள் கேரள அணிக்காக விரும்பும்போது மட்டுமே நீங்கள் விளையாட வருவீர்கள் என்பதை ஏற்க முடியாது” என ஜார்ஜ் தெரிவித்தார்.

அவர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க BCCI கோரியது ஆனால் நான் வேண்டாம் என்றேன் இல்லையென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அணியின் பரிசீலனையில் கூட அவர் இருந்திருக்க மாட்டார்” என்று தெரிவித்தார் ஜார்ஜ்.

இதை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரிஷப பண்ட் மற்றும் ராகுல் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles