என்ன நடந்தாலும் சரி.. சுப்மன் கில்லுக்கு 3 ஆண்டுகள் வரை நேரம் கொடுங்கள்.. ரவி சாஸ்திரி அடுக்கும் காரணங்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான கேப்டன்சியே காரணமாக விமர்சிக்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அட்டாக்கிங் கேப்டன்சியை செய்யாமல், டிஃபென்சிவ் கேப்டன்சியை செய்ததன் காரணமாக தோல்வியை சந்தித்தார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி ஆதரவு

இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் ரவி சாஸ்திரி பேசும் போது, சுப்மன் கில் இளம் வீரராக இந்திய அணிக்குள் வந்தார். இப்போது வளர்ந்த வீரராக மாறிவிட்டார். செய்தியாளரக்ள் சந்திப்பில் ரிப்போர்டர்களை கையாள்வது, டாஸின் போது நம்பிக்கையுடன் பேசுவது என்று சரியான பாதையில் இருக்கிறார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை சுப்மன் கில் கேப்டனாக தொடர 3 ஆண்டுகள் வரை குறைந்தது அனுமதியளிக்க வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் என்ன நடந்தாலும், அவரை மாற்றுவது பற்றி சிந்திக்கவே கூடாது. என்ன நடந்தாலும், சுப்மன் கில் கேப்டன்சியை தொடர வேண்டும். அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு பெருவெற்றியை பெற்று கொடுப்பார் என்று தோன்றுகிறது.

- Advertisement -

நிச்சயம் ஏமாற்றம்

ஒருவேளை சுப்மன் கில் மகத்தான கேப்டனாக உருவாகவில்லை என்றால், நிச்சயமாக ஏமாற்றம் அடைவேன். அவரிடம் ஒரு நலினம் இருக்கிறது. பேட்டிங் ஆடும் போது பார்க்கவே அற்புதமாக உள்ளது. அனுபவம் மூலமாக கற்றுக் கொண்டு சூழல், பிட்ச்-க்கு ஏற்ப விளையாட கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு சுப்மன் கில் அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பார் என்று கூறியுள்ளார்.

மிக இளம் வயதிலேயே சுப்மன் கில் கேப்டனாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் 2 ஆண்டுகள் மட்டுமே சுப்மன் கில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதேபோல் இந்திய அணியை ஒரேயொரு டி20 தொடரில் மட்டுமே சுப்மன் கில் வழிநடத்தி இருக்கிறார். இதனால் சுப்மன் கில் கேப்டனாக சிறப்பாக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles