8 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்.. கருண் நாயர், ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு.. இந்தியா ஏ அணி அறிவிப்பு

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் மூலமாக இங்கிலாந்து மைதானங்களுக்கு ஏற்ப இந்திய அணியின் இளம் வீரர்களை தயார் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கருண் நாயர் கம்பேக்

அதன் முதல் டெஸ்ட் போட்டி மே 30ம் தேதியும், 2வது டெஸ்ட் போட்டி ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னரும் தொடங்க உள்ளது. இந்த சூழலில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய ஏ அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் 8 ஆண்டுகளுக்கு பின் கருண் நாயர் இந்தியுஅ ஏ அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் இந்திய ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துணைக் கேப்டனாக துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் ஷர்துல் தாக்கூர் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைத்துள்ளது. பெரும்பாலும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அணிகளில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ருதுராஜ்-க்கு வாய்ப்பு

அதேபோல் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்சித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, கலீல் அஹ்மத், சர்ஃபராஸ் கான், இஷான் கிஷன் ஆகிய அனுபவ வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இளம் வீரர்களான மானவ் சுதார், தனுஷ் கோட்டியான், அன்சுல் கம்போஜ், ஹர்ஷ் துபே ஆ ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

முதல் போட்டிக்கு பின் 2வது போட்டியில் இருந்து சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் இணைந்து உள்ளனர். ஃபார்மில் இல்லாத இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிவடைந்த பின், இந்திய அணி வீரர்களுடன் இணைந்து இந்த வீரர்கள் ஒரு போட்டியில் விளையாட உள்ளனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles