இந்த ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபி அணி லக்னோ அணிக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஜோஸ் ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது வென்றார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி முதல் முறையாக கோப்பையை வெல்வதற்கு இவருடைய பந்துவீச்சு மிக முக்கிய காரணமாக இருந்தது. தற்போதும் இந்தத் தொடரில் இவருடைய பந்து வீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஜோஸ் ஹேசில்வுட் பேசும்போது “இந்த பெங்களூர் ஆடுகளம் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. இங்கு பவுன்ஸ் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. மேலும் ஆடுகளமும் மெதுவாக இருக்கிறது. இதனால் இங்கு பேட்டிங் செய்வது கடினமாக இருக்கிறது”
“நான் பும்ரா போல மெதுவான பந்துகளை வீசக்கூடிய திறமை கொண்டவன் கிடையாது. எனவே நான் என்னுடைய ரன் அப்பில் இதை சமன்படுத்த வேண்டியது இருக்கிறது. பயிற்சியில் சிலவற்றை முயற்சி செய்கிறேன். அவற்றை சரியான நேரத்தில் போட்டியில் பயன்படுத்த நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

