தோனி வேண்டாம்.. அவரோட திட்டமே போதும்.. வெற்றி இப்போ எங்க கையில – சூப்பர் கிங்ஸ் கேப்டன் பேட்டி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் இடையேயான ஆட்டத்தில் ஜோகன்ஸ்பர்க் அணி இறுதிக்கட்டத்தில் தோனியின் யுத்தியை பயன்படுத்தியதால் வெற்றி பெற்றதாக அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளஸிஸ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டியில் 206 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய டர்பன் அணிக்கு இறுதிக்கட்டத்தில் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது பந்து வீசிய முல்டர் தனது கடைசி பந்தை கட்டர் வைடாக வீச அது பேட்ஸ்மேன் தாண்டி விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் பேட்ஸ்மேன் ஒரு ரன் எடுக்க முயற்சித்து மறுமுனையை நோக்கி ஓட, அதற்குள் விக்கெட் கீப்பர் டோனவன் பெரேரா தனது கையுரையை கழற்றி நேராக பந்தை ஸ்டம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் செய்தார்.

- Advertisement -

இது 2016ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை கடைசியில் லீக் ஆட்டத்தில் எம்எஸ் தோனி செய்த அதே ஸ்டம்ப்பிங்கை பெரேரா ஒரு முறை நினைவு படுத்தினார். இதுகுறித்து பேசிய கேப்டன் பிளஸ்சிஸ் ” எனக்கு அந்த சமயத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டி நினைவுக்கு வந்தது. அந்தப் போட்டியில் கடைசி பந்தில் தோனி செய்த ரன் அவுட் அற்புதமானது. அப்போது பந்து வீச்சாளர் பந்தை கட்டர் வைடாக வீசியிருப்பார் அதைத்தான் நான் முல்டரிடம் பேசினேன். அதை அவர் சரியாக செய்ய வெற்றி எங்கள் வசமானது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles