சொந்த மண்ணில் இனி நீதான்யா கிங்கு.. சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்.. மிரளும் இங்கிலாந்து ஜாம்பவான்கள்

இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த போட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் போப் பவுலிங் தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்திருந்தது. இந்த சூழலில் 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 

- Advertisement -

ஜோ ரூட் சம்பவம்

- Advertisement -

இந்திய அணி கூடுதலாக 20 ரன்களை மட்டுமே சேர்த்து 4 விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் 224 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக தொடங்கியது. 10 ஓவர்களிலேயே 71 ரன்களை விளாசினர். சிறப்பாக ஆடிய பென் டக்கெட் 43 ரன்களையும், ஜாக் கிராலி 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

- Advertisement -

இதன்பின் களமிறங்கிய போப் 22 ரன்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் 29 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜின் அபாரமான பந்தில் வெளியேறினார். ஆனாலும் ஜோ ரூட் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். 22 ரன்களை கடந்த போது, ஜோ ரூட் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து அசத்தினார். 

2 சாதனைகள்

இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 94 போட்டிகளில் விளையாடி 7,216 ரன்களை விளாசி இருக்கிறார். தற்போது ஜோ ரூட் சொந்த மண்ணில் 84 போட்டிகளில் விளையாடி 7,224 ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சொந்த மண்ணில் 92 போட்டிகளில் விளையாடி 7,578 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 

- Advertisement -

ஜோ ரூட் சொந்த மண்ணில் ஆடிய போட்டிகளில் மட்டும் 23 சதங்களையும், 38 அரைசதங்களையும் விளாசி இருக்கிறார். அதேபோல் இந்திய அணிக்காக எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் ஜோ ரூட் தான் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles