இந்திய உள்நாட்டு கிரிக்கெட் இளம் வீரர் வைபவ் சூரிய வம்சி களத்திற்கு வெளியே தொழில் முறை வீரராக மாறவே மாட்டார் என ஜிதேஷ் சர்மா நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஜிதேஷ் சர்மா இந்திய ஏ அணியை வழிநடத்தினார். இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக வைபவ் சூரியவன்சி இடம் பெற்று இருந்தார்.
இதுகுறித்து ஜிதேஷ் சர்மா பேசும் பொழுது “வைபவ் சூர்யவன்சி மேல் நான் ஒரு மில்லியன் டாலர் முதலீடு செய்வேன். அவரால் நிச்சயம் உலக கிரிக்கெட்டில் பெரிய ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். அவரிடம் சிறந்த திறமைகள் இருக்கிறது”
“அதே சமயத்தில் அவர் தொழில் முறை வீரராக மாற மாட்டார் என்று நினைக்கிறேன். களத்தில் அவர் தொழில் முறை வீரராக இருக்கலாம். ஆனால் களத்திற்கு வெளியே அப்படியே அவர் மாறவே மாட்டார். ஏனென்றால் முதலில் அவர் இரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

