சும்மா நினைக்காதீங்க.. இஷான் கிஷான் தோனி கிட்ட தொழில் கத்துக்கிட்ட பையன்.. SRH கேப்டனா பட்டய கிளப்புவான் – கோச் உறுதி

தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடைக்கால கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய மாநில ஜார்கண்ட் அணி பயிற்சியாளர் இது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்டாக் அலி டிராபியை இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணி கைப்பற்றியது. மேலும் இஷான் கிஷான் பேட்ஸ்மேனாக இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தவராக வந்தார்.

- Advertisement -

இது குறித்து ஜார்க்கண்ட் பயிற்சியாளர் சன்னி குப்தா பேசும்போது ” ஒருமுறை ஜார்க்கண்ட் வீரர்கள் ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழல் வந்தது. இஷானிடம் பெரிய கார் இருந்தது. ஆனால் அவர் எங்களுடன் ஆட்டோவில் வந்தார். ஆனால் கேப்டனாக அணியில் யாராவது தவறு செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் என மிகவும் கண்டிப்புடன் இருந்தார்”

- Advertisement -

“அவர் சிரித்துக் கொண்டே இருப்பது போல தெரியும். ஆனால் ஒரு கேப்டனாக எதிரணி வீரர்கள் குறித்து மணிக்கணத்தில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்வார். நம்முடைய நோக்கம் சரியாக இருந்தால் தோல்வியை கூட ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லுவார். அவர் மகேந்திர சிங் தோனியிடம் கேப்டன் பொறுப்பு குறித்து கற்றுக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles