இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியின் மூலமாக மறுபடியும் டி20 கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
பும்ரா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் தொடர் கொண்ட போட்டிகளில் முழுமையாக விளையாடிவிட்டு ஓய்வு எடுத்த அவர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவில்லை. இந்த நிலையில் மறுபடியும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு அவர் மீண்டும் இந்திய அணிக்கு இணைந்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் பும்ரா சிறப்பான சாதனை ஒன்றை படைக்க காத்திருக்கிறார்.
அதாவது இதுவரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது பும்ரா, இந்தப் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையைப் படைப்பார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்கிற இமால சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

