கேப்டனாக தகுதியானவர் பும்ரா மட்டும்தான்.. இங்கிலாந்து மண்ணில் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் பேச்சு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜாம்பவான் வீரரான விராட் கோலி இருவரும் ஒரே வாரத்தில் ஓய்வை அறிவித்துள்ளனர். இரு வீரர்களும் ஃபார்மில் இல்லையென்றாலும், விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் என்பது ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் நிகரான ஒன்றாகும்.

- Advertisement -

இதனால் இந்திய அணியின் சீனியர் வீரராக பும்ரா மட்டுமே இருக்கிறார். இதனிடையே இந்திய அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அஸ்வின் கருத்து

அந்த வீடியோவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும் போது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்ல உள்ள இந்திய அணி முற்றிலும் புதியவர்களுடன் பயணிக்க உள்ளது. இந்திய அணிக்காக பெரும்பான்மையாக விளையாடிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், சீனியர் வீரராக பும்ரா மட்டுமே இருக்கிறார். இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்ய வேண்டிய வீரர்களில் அவரும் இருக்கிறார்.

- Advertisement -

என்னை பொறுத்தவரை பும்ரா கேப்டனாவதற்கு அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால் தேர்வுக் குழு என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. அதேபோல் அவரின் காயம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றை பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வை அறிவித்துள்ளதால், நிச்சயம் கேப்டன்சியில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது.

அனுபவம் முக்கியம்

அனுபவத்தை எந்த விலை கொண்டும் வாங்க முடியாது. அதுவும் இங்கிலாந்து போன்ற மைதானங்களில் அனுபவம் அளவிட முடியாத சொத்தாகும். விராட் கோலியின் எனர்ஜியும், ரோகித் சர்மாவின் அமைதியும் நிச்சயமாக மிஸ் செய்யப்படும். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

ஒரு கேப்டனாக மட்டுமாவது ரோகித் சர்மா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்ரால் அடுத்த கேப்டனை தயார் செய்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்த அறிவிப்பு மே 23ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles