இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் கொடுத்திருக்கிறது. இதில் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 63 ரன்கள் குறித்து இருக்கிறார். இதில் இந்தியாவின் பும்ரா இந்த டி20 உலக கோப்பையில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்து இருக்கிறது. அதிகபட்சமாக மிடில் வரிசையில் சிறப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதில் ஏழு போன்று மற்றும் மூன்று சிக்சர்கள் அடங்கும்.
ஆனால் பந்து வீச்சில் கலக்கிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கட்டுகள் கைப்பற்றினார். டி காக், ரிக்கல்டன் மற்றும் கார்பின் போஷ் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்கிற சாதனையை படைத்தார். மொத்தமாக டி20 கிரிக்கெட் 83 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த சாதனையை அவர் நிகழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 82 விக்கட்டுகள் வீழ்த்தி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.

