சிஎஸ்கே அணிக்கு வரும் பும்ரா? மும்பை அணி மீது வருத்தம்.. என்ன நடந்தது?

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இதற்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய இறுதி கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனிடையே பும்ரா என்று சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

அதில் சில நேரம் மௌனமாக இருப்பதை சிறந்தது என்று பும்ரா பதிவிட்டு இருந்தார்.இது மும்பை அணி குறித்து பும்ரா போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை பின் தொடர்வதை பும்ரா நிறுத்திவிட்டதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை அணிக்கு வந்திருக்கிறார். இந்த தருணத்தில் அடுத்த கேப்டனாக மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா தான் வருவார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் பும்ரா இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் புதிதாக தோனியை பும்ரா பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு பும்ரா திரும்ப வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை வீரர்களை மாற்றுவதற்கான டிரான்ஸ்பர் காலம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மும்பை அணியில் இருந்து தாம் விலக பும்ரா முடிவெடுத்தால் மற்ற அணிகள் அவரை அணுக வாய்ப்பிருக்கிறது.

இதில் பும்ராவில் முதல் ஆப்ஷன் ஆக சிஎஸ்கே அணி தான் இருப்பதாக தெரிகிறது. இதேபோன்று இரண்டாவது ஆப்ஷனாக அவளுடைய சொந்த மாநிலத்தில் சேர்ந்த அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

பும்ராவை அனுப்ப மும்பை இந்தியன்ஸ் அணி முடியாது என முடிவெடுத்து விட்டால் அவருக்கு அந்த அணியில் தொடர்வதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. ஏனென்றால் அணி நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே வீரர்களால் வேறு அணிக்கு செல்ல முடியும். இல்லையெனில் அந்த வீரர் அந்த ஐபிஎல் தொடரிலே ஒரு ஆண்டு விளையாட முடியாத படி நடைபெற வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles