ஜடேஜா டிரேட் நடக்க காரணமே அவர் தான்.. சென்னை அணி மேல கோவப்படாதீங்க ரசிகர்களே.. உண்மை இதான்

ஐ.பி.எலில் எதிர்பார்க்காத ஓர் மிகப் பெரிய டிரேட் அண்மையில் நடந்துள்ளது. வழக்கமாக வீரர்களை மற்ற அணிகளுக்கு கொடுத்து வேறொரு வீரரை மாற்றாக வாங்கும் பணியில் சென்னை அணி அமர்ந்ததில்லை. ஆனால் கடந்த ஆண்டு கடைசி இடத்தில் முடித்த பின்னர், பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

- Advertisement -

அதில் ஒன்று 12 ஆண்டுகளாக அணியின் அடையாளமாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் இருவரைக் ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து மாற்றாக சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சி.எஸ்.கே. எமோஷனலா சென்னை ரசிகர்கள், முதலில் கோபம் அடைந்தாலும் பின்னே அணியின் நலனைக் கருதி சஞ்சு சாம்சனை வரவேற்றனர். காசி விஸ்வநாதனும், இது மிகக் கடினமான முடிவாக இருந்த போதிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைப்பது அரிது என்பதால் இதைச் செய்ததாக கூறி என வீடியோ வெளியிட்டார்.

- Advertisement -

ஆனால் அண்மையில் ராஜஸ்தான் அணித் தரப்பில் வெளியான வீடியோவில், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஜடேஜாவே ராஜஸ்தான் அணி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு டிரேட் குறித்துப் பேசியதாக கூறியுள்ளனர். அதாவது, கேப்டனாக ஜடேஜா செயல்பட வேண்டிய ஆசையில் இந்த முடிவை எடுத்துள்ளார். பின்னர் டிரேடில் சஞ்சு சாம்சனைக் கருதி சென்னை அணியும் ஒப்புக் கொண்டுள்ளது.

- Advertisement -

2022இல் ஏற்கனவே சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா 7 போட்டிகளில் அணியை வழி நடத்தினார். ஆனால் அந்த சீசன் சரியாக போகாததால், இடையிலேயே தோனி பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். அணியை வழிநடத்தும் தன் ஆசையைக் கேரியரின் கடைசியில் நிறைவேற்றிக் கொள்ள ஜடேஜா முடிவு செய்து தான் வெளியேறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles