பிளமிங்கை சம்மதிக்க வைப்பாரா தோனி.? தோனியின் உதவியை நாடும் பிசிசிஐ.. இந்திய அணிக்கு அந்த பொன்னான வாய்ப்பு உருவாகுமா?.

வருகிற டி20 உலக கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயற்ச்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, அதற்கு அடுத்ததாக தலைமை பயிற்சியாளரை நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ராகுல் டிராவிட். இவரது தலைமையில் டி20 உலக கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 50 ஓவர் உலகக் கோப்பை என அனைத்திலும் இறுதிப்போட்டி வரை வந்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -

வருகிற ஜூன் மாதத்தோடு இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அதற்குப் பிறகு திரும்பவும் பயிற்சியாளராக செயல்பட இவருக்கு விருப்பமில்லை என்பது போல் தெரிகிறது. இதனால் அடுத்த பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட நிலையில், கௌதம் கம்பீர், ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் மகேலா ஜெயவர்த்தனா ஆகியோரிடம் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் தலைமை பயிற்சியாளராக விளங்கும் ஸ்டீபன் பிளம்மிங்கின் பெயர் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது. இவரை அடுத்த இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமல்லாது, இன்னும் மூன்று டி20 அணிகளின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருவதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் விடுவித்து இந்திய அணியின் பயிற்சியாளராக வர சம்மதிப்பாரா? என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் பிசிசிஐ தற்போது மகேந்திர சிங் தோனியின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனிக்கும் ஸ்டீபன் பிளம்மிங்க்கும் இடையேயான நெருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தோனி பேசினால் பிளம்மிங் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்ற அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனியை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பதிரானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. எல்லாம் சிஎஸ்கேவின் மகிமை.. எல்பிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன பத்திரானா

ஆனால் ஸ்டீபன் பிளம்மிங் இதற்கு முன்பாக பயிற்சியாளர் பொறுப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை அணுகவில்லை என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ பிளம்மிங் இது குறித்து தங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். இதில் எந்த அளவு உண்மை என்று தெரியாத நிலையில் இதன் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிளம்மிங் இந்திய அணிக்கு தலைமை தாங்கினால் இந்திய அணியின் எதிர்காலத்துக்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles