இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ருத்ராஜ் தலைமையினான இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவியது.
இதற்கு முன்னதாக, பயிற்சி டெஸ்ட் தொடரின் கடைசி நாள் ஆட்டத்தில், பந்தில் பல கீறல்களைக் கண்டறிந்த நடுவர்கள் அப்பந்தை மாற்றினர். அப்பொழுது, இந்திய ஏ வீரர்கள் நியாயமற்ற முறையில் பந்தில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தனர்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் “பந்து சேதமடைந்ததற்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணி எளிதாக வெற்றி பெற்ற பின்னர், இந்தப் பிரச்சனையும் ஒரு விதத்தில் தீர்வடைந்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் விக்கெட் கீப்பருமான இயான் ஹீலி இந்திய ஏ அணியை குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்திய ஏ அணி போட்டியை தன் பக்கம் திருப்பதற்காக ரிவர்ஸ் ஸ்விங்கைப் பெற முயற்சித்திருக்கலாம். இதற்காக, நகங்களைக் கொண்டு பந்தை கீறி இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய வீரர், இயானை தொடர்ந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னரும் இந்திய அணியை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் “இந்திய ஏ அணி பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அறிக்கை வெளியிடுங்கள்:
புதன்கிழமை பேசிய டேவிட் வார்னர், “வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபி முன்னதாக பந்தை சேதப்படுத்திய சம்பவத்தை குறித்து விரைவாக ஆய்வு நடத்த வேண்டும். போட்டி நடுவர்கள்; அந்த அணியிடம் கேள்விகளைக் கேட்க வேண்டும்”
“இந்திய அணியானது கோடை காலத்தில் விளையாடியதால் பந்தை தன்னால் முடிந்தவரை சேதப்படுத்தி இருக்கலாம்”என்று கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இது தொடர்பாக போட்டி நடுவர்கள் வெளியே வந்து அவர்களின் சொந்த ஊழியர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடுவரின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டால்; அந்த முடிவுக்காக துணை நிற்க வேண்டும் மற்றும் வெளிப்படையாக அறிக்கையும் வெளியிட வேண்டும். ஆனால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமானது; இது வரையில் வெளிப்படையாக அறிக்கையை வெளியிட்டதாக நான் பார்க்கவில்லை”என்று ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

