நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் நட்சத்திர வீரர் இஷான் கிஷான் 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டிக்கான ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. இந்த நிலையில் இவர் விளையாடிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாக அமைந்தது. மேலும் சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் கனவை கலைத்து விட்டார். இது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்போது “நான் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்கும் போதே ஆடுகளம் எதுவாக இருக்கிறது என்பதை பார்த்து விட்டேன். இப்படியான ஆடுகளத்தில் நாம் நம்மை முழுவதுமாக நம்ப வேண்டும். மேலும் எவ்வளவு நேரம் விளையாட முடியுமோ அவ்வளவு நேரம் விளையாட வேண்டும். நான் அதைத்தான் செய்தேன்”
“மேலும் சமீபத்தில் எங்கள் உறவினர் சகோதரி இறந்துவிட்டார். அவருடைய சகோதரர் போட்டியை பார்க்க வந்திருந்தார். அவரது முகத்தை மைதானத்தில் பார்த்ததுமே போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

