இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இஷான் கிஷான் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொழுது தான் மிகவும் சோகமாக இருந்த பொழுது விராட் கோலி தன்னை அழைத்துப் பேசியதையும், சச்சின் டெண்டுல்கர் தனக்கு எப்படியானவர் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது “நான் ஆர்சிபி அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மிகவும் சோகமாக இருந்தேன். கண்ணீரை அடக்கிக் கொண்டு அழுது விடக்கூடாது என படுத்து கிடந்தேன். ‘இவன் ஏன் இப்படி இருக்கிறான்? இவனுக்கு என்ன ஆச்சு? இவன் ஏதோ கஷ்டத்தில் இருக்கிறான்?’ என்று விராட் கோலி இணைத்திருக்க வேண்டும். அதனால் என்னை அவர் கூப்பிட்டார். பிறகு அவர் எனக்கு விஷயங்கள் குறித்து விளக்கி சொன்னார். அது மிகவும் கடினமான தருணம”
“என்னுடைய சிறுவயதில் என்னுடைய படுக்கை அறையின் வலப்புறத்தில் மூலையில் ஒரு சிறிய பூஜை அறையில் இருந்தது. அதில் நான் சச்சின் ஸார் புகைப்படத்தை வைத்திருந்தேன். மேலும் முறையாக தினம் தோறும் நான் அவருக்கு பூஜை செய்து வந்தேன். எனக்கு அவர் கடவுள் மாதிரி” என்று கூறி இருக்கிறார்.

