இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதே பல பேருக்கு கனவாக இருக்கிறது.முன்பெல்லாம் சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற பெரிய வீரர்கள் எல்லாம் இந்திய அணிக்காக விளையாடுவதை பொற்காலமாக நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
தங்கள் வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இந்திய அணியின் ஜெர்சியை பெருமையுடன் அணிந்திருந்தார்கள். ஆனால் தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக அளவு பணம் கிடைப்பதால் ஐபிஎல் போட்டியை விரும்பும் அளவுக்கு இந்திய அணியை விரும்ப மாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் 25 வயது அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிசன் தம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ரிஷப் பண்ட் அணியில் இல்லாத நிலையில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பலரும் கருதினர்.
தற்போது தென்னாப்பிரிக்கா போன்ற முக்கிய தொடர் நடைபெற உள்ள நிலையில் திடீரென்று கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இஷான் கிஷன் தொடர்ந்து இந்திய அணிக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு தொடரிலும் இஷான் கீசன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பெஞ்சில் அமர்ந்து தான் அவர் இருக்கிறார். இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதில் தான் பங்கேற்க விரும்பவில்லை என்றும் தமக்கு ஓய்வு தேவைப்படுவதால் சில காலத்திற்கு கிரிக்கெட் போட்டிகளில் தம்மை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும் இஷான் கிஷன் பிசிசிஐ இடம் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பிசிசிஐ, இஷான் கிஷனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே எஸ் பரத்தை சேர்த்து இருக்கிறது . தென்னாப்பிரிக்க தொடரில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில் தற்போது ரிஷப் பண்ட் ,இசாம் கிஷன் ஆகியோர் விலகி இருப்பதால் இந்திய அணிக்கு அது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

