இந்திய t20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தன்னுடைய அதிரடியை நிருபித்து டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான நபராக இருக்கிறார். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலமாக நியூசிலாந்து அணி சின்னாபின்னமானது நினைவிருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் இஷான் கிஷன் உட்பட இந்திய அணி வீரர்கள் டி20 உலக கோப்பையில் பங்கு பெறுவதற்கு தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வலை பயிற்சி பெற்று வரும் இஷான் கிஷன் பும்ரா குறித்து சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது வலைப்பயிற்சியில் கூட பும்ராவின் பந்துகளை அடிப்பதை அவர் விரும்ப மாட்டார் என்கிற ரீதியில் இஷான் கிஷன் சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வலை பயிற்சி ஆடுகளங்கள் சில நேரங்களில் புல் இல்லாமல் உலர்ந்த மண்ணோடு இருக்கும். அந்த சமயத்தில் சில நேரங்களில் பந்து மெதுவாகவும் வரும். ஆடுகளம் புல் உடன் இருப்பதை மற்ற பவுலர்கள் பார்த்தால் நம்ம பையன் தானே என்று கொஞ்சம் மெதுவாக வீசுவார்கள். ஆனால் அதேசமயம் பும்ரா பாய் வீசும் பந்தை பேட்டின் நடுப்பகுதியில் ஆடிவிட்டால் அவர் நிச்சயமாக அடுத்த பந்தை அடிக்கவே முடியாத அளவிற்கு பவுன்சராக தான் வீசுவார் என்று உறுதியாக சொல்லலாம்” என்று பேசி இருக்கிறார்.

