நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு நடந்த பொழுது தான் இஷான் கிஷானிடம் என்ன பேசினேன்? என்பது குறித்து சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.
இந்த டி20 உலக கோப்பை தொடரில் இஷான் கிஷான் 193 ஸ்ட்ரைக்ரேட்டில் மொத்தம் 317 ரன்கள் குவித்திருக்கிறார். சஞ்சு சாம்சன் 321 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசும் பொழுது ” டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அலைபேசியில் இஷான் கிஷானுக்கு அழைத்தேன். அவரிடம் எனக்காக இந்த உலகக் கோப்பையை வென்று தர முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு ஒரு சில வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயமாக அதை செய்து தருவேன் என்று சொன்னார்”
“அவர் சொன்னபடியே இப்பொழுது அதைச் செய்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அணியில் இல்லாமல் இருந்தார். ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கடுமையாக உழைத்து திரும்பி வந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்” என்று பாராட்டியிருக்கிறார்.

