அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய உள்நாட்டு தொடரில் கலக்கிய இசான் கிசான் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இசான் கிசானின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சு சம்சனை விட இசான் கிசானால் சிறப்பாக செயல்பட முடியும் என்று அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார். இதுகுறித்து சிறுவயது கோச்சான உத்தம் முசும்தார் கூறும்போது “இந்திய அணி நிர்வாகம் துவக்க இடத்தில் நிச்சயம் இசான் கிசானை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் அவர் பவர் பிளே ஓவர்களில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து அவரால் நிச்சயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
அவரால் மிடில் வரிசையிலும் பேட்டிங் செய்ய முடியும். ஆனால் துவக்க இடத்தில் களமிறங்கி அதைவிட மிகச் சிறப்பாக செயல்படுவார். அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த சையது முஸ்தாக் அலி தொடரிலும் துவக்கை இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜார்கண்ட் அணி கோப்பையை வெல்ல உதவி இருக்கிறார். எனவே அவர் நிச்சயம் துவங்க இடத்தில் களமிறங்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.1

