இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்து வருகிறது.
பும்ரா விளையாடுவாரா?
இதனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பும்ராவுக்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. 3வது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடி இருந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியிலேயே பும்ரா எச்சரிக்கையுடன் விளையாடி இருந்தார். இதனால் 4வது டெஸ்டில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதேபோல் ரிஷப் பண்ட் 3வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார். இதன் காரணமாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யவே களமிறங்கவில்லை. அவரின் விரல்களில் காயம் ஏற்பட்டிருந்தது.
ரிஷப் பண்ட் காயம்
இதனால் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் 4வது டெஸ்டில் ஆடுவாரா என்ற கேள்வி இருந்தது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசும் போது, பும்ரா விளையாடுவாரா என்பதை அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தான் முடிவு செய்வோம். ரிஷப் பண்டை பொறுத்தவரை அவரின் காயத்திற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டிருந்தது.
அதிகமாக பயப்படும் அளவிற்கு ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்படவில்லை. இதனால் எந்த கவலையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் 2வது இடத்தில் இருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட்-ன் ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

