வருண் இந்த மாற்றத்தை நீங்க திட்டமிட்டு செஞ்சிருந்தா.. நிச்சயமா இந்திய அணி தோல்வி அடையும் – இர்பான் பதான் கருத்து

தற்போது இந்திய அணியின் பிரதான சுழல் பந்துவீச்சாளராக விளங்கும் வருண் சக்கரவர்த்தி கடந்த சில போட்டிகளாக நிறைய ரன் கொடுத்து வருகிறார். அவர் நிறைய சாட் பந்துகள் வீச ஆரம்பித்திருப்பது நிறைய சிக்ஸர் அடிப்பதற்கு எதிரணிக்கு வசதியாக அமைகிறது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு மிடில் ஓவர்களில் வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை செலுத்த முடியாதது முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” தற்போது வரும் பந்துவீச்சு குறித்தான கவலை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் 63 சதவீதம் ஷார்ட் பந்துகள் வீசி இருக்கிறார். பொதுவாக மற்ற ஸ்பின்னர்களை விட இவர் கொஞ்சம் இந்த வகை பந்துகளை அதிகம் வீசுவார். ஆனால் இந்த முறை மிக அதிகமாக வீசி இருக்கிறார். ஒருவேளை இது அவரது திட்டமிட்ட மாற்றமாக இருந்தால் இந்திய அணிக்கு பெரிய சிக்கலை உருவாக்கும்”

- Advertisement -

“இப்போதைக்கு வருண் அவருக்கு பழக்கப்பட்ட கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிந்து எதிராக திரும்பி வர முடியும். அவர் தனது லென்த்தை இன்னும் கொஞ்சம் சரி செய்து மேலே வைக்க வேண்டும். மேலும் இடதுகை வீரர்களுக்கு கிரீசில் இடது புறமாக இருந்து வந்து வீச வேண்டும். அவர் தனது முதல் ஓவரில் விக்கெட் கைப்பற்றி விட்டால் எந்த அணிக்கும் பெரிய அழுத்தத்தை உருவாக்குவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles