சீக்கிரமா அபிஷேக்சர்மாவுக்கு இதை பண்ணுங்க.. அவர் அதிலும் பெரிய ஆளா வலம் வருவார் – இர்ஃபான் பதான் நம்பிக்கை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது தற்போது நடைபெற்று வரும் நிலையில் அபிஷேக் ஷர்மா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேட்ஸ்மேனாக மாறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் அபிஷேக் ஷர்மா பெயர் இடம் பெற வேண்டும் என்று இர்பான் பதான் கூறுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “50 ஓவர் தொடருக்கான உலகக்கோப்பை அணியில் அபிஷேக்சர்மா பெயர் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் போன்ற அதிரடி வீரர்கள் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதுபோல டி20 கிரிக்கெட்டில் நடப்பது போலவே ஒரு நாள் கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களை முழுவதுமாக பயன்படுத்தினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்

- Advertisement -

எனவே அபிஷேக் ஷர்மா அது போன்ற தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர்கள் பெயர் அந்த பரிசீலணையில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன் என அவர் பேசியிருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் அபிஷேக்சர்மா அசைக்க முடியாத வீரராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles