இந்திய அணி நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் எப்படி இருக்க வேண்டும் என்றும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா எப்படியான மரபை விட்டு சென்று இருக்கிறார்? அதை சூரியகுமார் யாதவால் தொடர்ந்து எடுத்துச் செல்ல முடியுமா என்பது குறித்து இர்பான் பதான் மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறும் பொழுது ” இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா உருவாக்கி இருக்கும் பாரம்பரியம் மிகவும் பெரியது. அவருடைய அந்த மரபை சூரியகுமார் முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. அது சூரியகுமார் யாவும் மீண்டும் நல்ல முறையில் பேட்டிங் செய்கிறார். அவர் நம்பிக்கையுடன் டி20 உலகக் கோப்பைக்குள் நுழைய இருக்கிறார். இந்த நம்பிக்கைதான் எல்லாவற்றையுமே முடிவு செய்யப் போகிறது”
“நீங்கள் நம்பிக்கை இல்லாமல் ஒரு உலகக்கோப்பை தொடர்பில் கேப்டனாக பேட்ஸ்மேனாக நுழைய முடியாது. தற்போது அவர் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னோக்கி எடுத்துச் சென்று உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் இந்திய அணி உலக கோப்பையை வென்ற எல்லா முறையும் எடுத்து பார்த்தீர்கள் என்றால், அந்த இந்திய அணிகளின் கேப்டன்கள் எப்படி அணியை வழிநடத்தினார்கள் அவர்களுடைய தலைமை பண்பு எப்படி இருந்தது? என்பது மிகச் சிறப்பாக இருக்கும். அந்த பொறுப்பு சூரியகுமார் யாதவுக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

