புத்திய காட்டிடாரு கம்பீர்.. பயிற்சியாளர் பவரை தவறாக பயன்படுத்தி.. ஹர்ஷித் ராணாவை கொல்கத்தா அணி சுலபமாக தக்க வைக்க உதவியுள்ள கம்பீர் !

நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் வீரர்களைத் தக்க வைப்பதில் அவர்களுக்கு பெரிய சிரமம். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் மெண்டாராக திகழ்ந்த கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளர் பவரை வைத்து கொல்கத்தா அணிக்கு உதவியுள்ளது மற்ற அணி ரசிகர்கள் மத்தியில் பெரிய கடுப்பை உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

2025 ஐ.பி.எல் தொடருக்கு முன் தக்க வைக்கும் வீரர்கள் மற்றும் ஏலத்திற்கு புதிய விதிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ, 20 கோடிகள் பர்ஸ் தொகையை கூட்டிட்டு, வீரர்கள் தக்க வைப்பதில் செக் வைத்துள்ளது. முதல் மூன்று வீரர்களை 18, 14, 11 கோடிகளுக்குத் தக்க வைத்துவிட்டு மேலும் வீரர்களை தக்க வைக்க வேண்டுமானால் நான்காவது, ஐந்தாவது வீரர்களை 18, 14 கோடிகளுக்கு மட்டுமே தக்க வைக்க இயலும். இதன் மூலம் மொத்தம் 75 கோடிகள் காலியாகிவிடும்.

- Advertisement -

கொல்கதா அணியின் நட்சத்திர வீரர்கள் பட்டாளதைப் பார்க்கையில் அவர்கள் நிச்சயம் 5 வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்வர். கே.கே.ஆர் அணியிடம் இது தவிர பல அன்காப்புடு இளம் இந்திய வீரர்களும் இருக்கின்றனர். அதில் கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டவர் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை அன்காப்புடு வீரராக கொல்கத்தா அணி தக்க வைக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

- Advertisement -

2024 ஐ.பி.எல் தொடரில் ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை அள்ளி அணியின் முக்கிய அங்கமாக விளங்கினார். அவரின் சிறப்பான செயல்பாட்டை அடுத்து இலங்கை தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்னர் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20ஐ தொடரிலும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இந்த முறையும் அவருக்கு இந்திய அணியில் களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணி அவரை 4 கோடிகளுக்கே சுலபமாக தக்க வைத்துக் கொள்ளும். ராணாவை இந்திய அணியில் விளையாட வைக்காமல் தன் முன்னாள் அணியான கொல்கத்தாவுக்கு உதவ வேண்டுமென பயிற்சியாளர் கம்பீர் வேண்டுமென்ற இதனைச் செய்தார் என மற்ற அணி ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

- Advertisement -

இரு தொடர்களுக்கு அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் அறிமுகமாவது எப்படி ? அவரை மட்டும் விட்டு விட்டு, நிதிஷ் ரெட்டி போன்ற மற்ற அனைத்து ஐ.பி.எல் அணியின் அன்காப்டு வீரர்களும் இந்திய அணியின் அறிமுகமாகிவிட்டனர். தன் பயிற்சியாளர் பதவியை வைத்து கம்பீர் திட்டமிட்டே கொல்கத்தா அணிக்கு உதவியுள்ளதாக அனைவரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிதிஷ் ராணா இன்று மூன்றாவது டி20ஐ போட்டியில் விலையாடததற்கு காரணம் அவருக்கு வைரல் காய்ச்சல் இருந்ததால் தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளன. ஆனால் அதற்கு முந்தைய போட்டிகளும் அவர் களமிறங்காதது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles