ரோகித் முதுகில் குத்திய மும்பை.. வாரி அணைத்த சிஎஸ்கே.. ரோகித் மனைவி செய்த மாஸ் சம்பவம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிறந்த அணி என்றால் அது சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் தான். இரு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்கள். சிஎஸ்கே வின் காட் பாதர் என்றால் அது தோனி தான்.

- Advertisement -

அதேபோல் மும்பை அணியின் தலையெழுத்தையே மாற்றி கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா தான். ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் ஐந்து சீசன்களில் கடுமையாக தடுமாறியது. ஆனால் ரோகித் சர்மா வந்த பிறகுதான் மும்பை அணி அடுத்தடுத்து கோப்பைகளை வென்று கைப்பற்றியது.

- Advertisement -

அப்படி மும்பை அணி பல சாதனைகளை படைத்ததற்கு ரோகித் சர்மா தான் காரணமாக இருந்தார். ஆனால் அப்படிப்பட்ட ரோகித் சர்மாவை மும்பை அணி அதிரடியாக நீக்கியது. ரோகித் சர்மா கடந்த மூன்று ஆண்டுகளாக மும்பை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மும்பை அவரை நீக்கியது.

- Advertisement -

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரோகித் சர்மா ரசிகர்கள், இனி மும்பைக்கு பின் தொடர்பு போவதில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை அணியும் மும்பை அணியும் எதிரும் புதிருமாக ஐபிஎல் தொடரில் இருப்பார்கள்.

இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா அணியிடம் தோனியின் சிஎஸ்கே பலமுறை தோல்வியை தழுவி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் எல்லாம் மும்பை இடம் தோற்று இருக்கிறது. இப்படி தோனிக்கு சிம்ம சொப்பனமாக ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதன் படி பத்து ஆண்டுகள் எங்களுக்கு சிறப்பான ஒரு சவாலை அளித்திருக்கிறீர்கள். ரோகித் சர்மா உங்களுக்கு எங்களுடைய மரியாதைகள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு போட்டிருந்தது.

இதைப் பார்த்த ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சிங், மஞ்சள் நிறத்தில் இதயம் சிம்பிள் ஒன்றை பதிலாக பதிவிட்டிருக்கிறார். இதேபோல் ஒரு பதிவை மும்பை அணி போட்டிருந்தது. ஆனால் அதற்கு ரோகித் சர்மா மனைவி எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கு விருப்பம் இல்லாமல் அவரிடம் கேள்வியை கேட்காமல் மும்பை அணி இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் எதிரி அணியாக இருந்த சிஎஸ்கே கூட ரோகித் சர்மாவுக்கு மரியாதை அளித்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தான் அவருடைய மனைவி ரித்திகா சிங் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles