ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் பல்வேறு வீரர்களின் விடுவித்து பிசிசிஐக்கு பட்டியலை அனுப்பி இருக்கிறது. அந்த பட்டியில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்த நிலையில் வீரர்கள் தக்க வைக்கப்பட்டதற்கு பிறகு குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ்க்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் மினி ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளிடம் எவ்வளவு பணம் எஞ்சியிருக்கிறது. எத்தனை வீரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணியிடம் 31 கோடியே 40 லட்சம் ரூபாய் இருக்கிறது. சிஎஸ்கே அணி வெறும் ஆறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் அடங்குவார்கள். டெல்லி அணியிடம் 28 கோடியே 95 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஒன்பது பேரை வாங்க வேண்டும்.
குஜராத் அணியிடம் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் இருக்கிறது. அவர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்களை வாங்க வேண்டும். கொல்கத்தா அணியிலும் 32 கோடியே 20 லட்சம் ரூபாய் இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 12 வீரர்களை வாங்க வேண்டும். லக்னோ அணியிடம் 13 கோடியே 15 லட்சம் ரூபாய் இருக்கிறது. அவர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஆறு வீரர்களை வாங்க வேண்டும்.
மும்பை அணியிடம் 17 கோடியே 75 லட்சம் இருக்கிறது. அவர்கள் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்களை வாங்க வேண்டும். பஞ்சாப் அணியிடம் 29 கோடியே 10 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது. அவர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்களை வாங்க வேண்டும். ஆர் சி பி அணியிடம் 23 கோடியே 25 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது.
அவர்கள் மூன்று வெளிநாட்டு வீடுகள் உட்பட ஆறு வீரர்களை வாங்க வேண்டும். ராஜஸ்தான் அணியிடம் 14 கோடியே 5 லட்சம் ரூபாய் என்று இருக்கிறது. இதில் அவர்கள் மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட எட்டு வீரர்களை வாங்க வேண்டும். ஹைதராபாத் அணியிடம் 34 கோடி பாக்கி இருக்கிறது. இதில் அவர்கள் மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஆறு பேரை வாங்க வேண்டும்.
மொத்தமாக இந்த ஏலத்தில் அணியிடம் 262 கோடி 95 லட்சம் ரூபாய் என்று இருக்கிறது இதில் அவர்கள் 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்களை மொத்தமாக வாங்க வேண்டும்.

