இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பிசிசிஐயின் உத்தரவை மீறி விட்டார்கள் என்று தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில் அதற்கான உண்மை ஆதாரம் தற்போது வெளிவந்துள்ளது.
விராட் ரோஹித் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் என இரண்டு ஃபார்மெட்டிலும் ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு இந்திய வீரர் இந்திய தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது பிசிசி-யின் உத்தரவாகும். இதன்படி விராட் கோலி மற்றும் ரோகித் இருவரும் விஜய் ஹசாரே டிராபியின் முதல் சுற்று போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இரண்டாவது சுற்றில் பங்கு பெறாமல் வெளியேறி பிசிசிஐ இன் உத்தரவை மீறி விட்டார்கள் என்ற தகவல்கள் பரவியது.
இந்த சூழ்நிலையில் இருவரும் முதல் சுற்றின் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள் எனவும் இதனால் அவர்கள் இனிவரும் சர்வதேச போட்டிகளில் தாராளமாக விளையாடலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. இந்த சூழ்நிலையில் விதிமுறையை மீறி விட்டார்கள் என்று இணையத்தில் வலம் வரும் செய்தி வதந்தி என்றும் இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

