உலக கோப்பை தோல்வி.. இந்தியா செஞ்ச தப்பு.. நானே பார்த்தேன்.. முகமது கைப் விமர்சனம்

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இத்தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தொடர்ச்சியாக பத்து போட்டிகளில் வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அரை இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி உலக கோப்பையை வென்றது போல், இம்முறையும் ரோஹித் சர்மா தலைமையின் கீழ் உலக கோப்பையை வென்று வரலாறு படைக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இறுதிப் போட்டியில் நடந்ததோ வேறு. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில், பந்துவீச்சை தேர்வு செய்து திருப்பத்தை அங்கேயே கொடுத்தது.
காரணம் ஆஸ்திரேலியா கேப்டன் ஆடுகளத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் முதலில் பேட் செய்தால் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதை ஆஸ்திரேலியா அணி உணர்ந்திருந்தது.

- Advertisement -

இதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா அணியிடம் பரிதாபமாக தோல்வியடைந்து இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதையும் உடைத்து சுக்கு நூறாக ஆக்கியது. இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஆடுகளத்தை சுழலுக்கு சாதகமாக அமைத்ததே என்று ஹர்பஜன் சிங் உட்பட பல முன்னாள் வீரர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறும் பொழுது இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் தயாரிக்கும் போது தான் அங்கேயே இருந்ததாகவும், இந்திய அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இது குறித்த அவர் விரிவாக கூறுகையில்

- Advertisement -

“நான் இறுதிப் போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்தேன். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் 3 நாட்களில் ஒரு மணி நேரம் ஆடுகளத்தின் பக்கத்திலேயே நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆடுகளத்தின் நிறம் மாறுவதை நான் அப்போதுதான் பார்த்தேன். ஆடுகளத்தில் இருந்த புல்லை முழுவதும் அகற்றி விட்டனர் மற்றும் தண்ணீரை ஊற்றவில்லை.

ஆஸ்திரேலியாவில் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் இருப்பதால் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு மெதுவான ஆடுகளத்தை கொடுக்க விரும்பியது. இதை ரசிகர்கள் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. ஆடுகளத்தை மைதானப் பராமரிப்பாளர்கள்தான் தயார் செய்கிறார்கள் என்பதெல்லாம் என்பதெல்லாம் முற்றிலும் பொய். நாம் மைதானத்தைப் பார்வையிடையில் தண்ணீர் அடிக்க வேண்டாம், புற்களை குறையுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம்.

அதுவும் நம் சொந்த மைதானம் என்பதால் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துகிறோம். முதலில் பேட்டிங் செய்தால் பிட்ச் மெதுவாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி நன்கு புரிந்து கொண்டது. இதனால்தான் பேட்டிங் தேர்ந்தெடுக்காமல் பந்து வீச்சு முதலில் தேர்வு செய்தது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles