நைட் படுக்க போறப்ப பயம் பதட்டம் இருக்கு.. உலகக் கோப்பையை நாம் ஜெயிக்க இத செஞ்சே ஆகணும் – இந்திய பேட்டிங் கோச் அறிவுரை

இந்த t20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேசியிருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி தங்களுக்கு மிக மோசமாக அமைந்து விட்டதாகவும், தங்களுடைய தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை எனவும் மிகவும் வெளிப்படையாக கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது ” இரு நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில் எங்களுடைய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் உலகக்கோப்பையில் திடீரென எங்களுக்கு ஒரு சரிவு உருவாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டி எங்களுக்கு மிக மோசமான போட்டியாக எதிர்பாராத விதமாக அமைந்துவிட்டது. எங்களுடைய தொடக்க வீரர்களும் சரியாக விளையாடவில்லை. ஆனால் இது குறித்து மன அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை; கவலைப்பட வேண்டாம்”

- Advertisement -

“ஒவ்வொரு இரவு படுக்க செல்லும் பொழுது பயமும் பதட்டமும் இருந்து கொண்டேதான் இருக்கும். இதை நாம் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் முறை வீரரின் வாழ்க்கையில் இது ஒரு பகுதி. அதே சமயத்தில் நாம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. நாம் எதையும் எதிர்மறையாக உணராமல் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles