நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் நடுவில் வாய்ப்பு பெற்று இறுதியில் ஐந்து போட்டிகளில் 329 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். அவர் பேட்டிங்கில் திடீரென விஸ்வரூபம் எடுத்து வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிசான்சு கோடக் பேசியிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு சஞ்சு சாம்சன் முக்கியமான மூன்று போட்டிகளில் தொடர்ந்து பெரிய அரை சதங்கள் அடித்தது முக்கிய காரணமாக அமைந்தது. அதே சமயத்தில் இந்த மூன்று போட்டிகளிலும் அவரால் சதத்தை அடித்திருக்க முடிந்தாலும், அவர் அளிக்காத விளையாடி அதைத் தவறவிட்டார்.
இதுகுறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேசும் பொழுது “பிளேயிங் லெவனின் இல்லாத வீரர்களை நம்பிக்கையுடன் இருக்க வைத்தோம். அவர்களுக்கு எப்போது வேண்டுமானால் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினோம். மேலும் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் உள்ளே சென்று சிறப்பாக விளையாடுவேன் என சஞ்சு சாம்சன் சொல்லி இருந்தார். இறுதியில் அவர் சொன்னபடியே நடந்தது”
“மேலும் நீங்கள் சதம் அடித்திருக்கலாம் என நான் அவரிடம் சொன்னேன். நீங்கள் தான் தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்கள், ஆனால் சதத்தையும் அடிக்க சொல்கிறீர்கள், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படி செய்வது? என அவர் கேட்பார்” என்று கூறியிருக்கிறார்.

