எப்பா இந்திய ஃபீல்டர்களா.. இன்னும் எத்தனை கேட்ச்களைதான் விடுவீங்க.. நொந்துபோன பும்ரா!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

சொதப்பிய ஃபீல்டர்கள்

இந்த சூழலில் 3வது நாள் ஆட்டத்தை போப் – ப்ரூக் கூட்டணி தொடங்கியது. இதில் பிரசித் கிருஷ்ணா வீசிய 3வது ஓவரிலேயே போப் 106 ரன்கள் எடுத்து வெளியேற, ஹாரி ப்ரூக் – பென் ஸ்டோக்ஸ் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தனர். பின்னர் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஜேமி ஸ்மித் 40 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

மறுபுறம் சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்தாலும் டெய்லண்டர்களின் அபார ஆட்டத்தால், இங்கிலாந்து அணி எளிதாக 450 ரன்களை கடந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டர்கள் மட்டும் மொத்தமாக 5 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளனர். அதிலும் பும்ரா பவுலிங்கில் மட்டுமே 4 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டுள்ளது.

- Advertisement -

5 கேட்ச் மிஸ்

நேற்று பென் டக்கெட் கொடுத்த 2 கேட்ச்களை ஜெய்ஸ்வால் ஒருமுறையும், ஜடேஜா ஒருமுறையும் கோட்டைவிட்டனர். இதன்பின் போப் கொடுத்த ஒரு கேட்சை ஜெய்ஸ்வாலும், ஜேமி ஸ்மித் கொடுத்த மற்றொரு கேட்சை மீண்டும் ஜெய்ஸ்வாலும் கோட்டைவிட்டார். இது போதாதென்று ஜடேஜா பவுலிங்கில் ரிஷப் பண்ட் ஒரு கேட்சை கோட்டைவிட்டார். 

தொடர்ந்து பும்ரா நோ-பால் மூலமாக ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியின் ஃபீல்டர்கள் செய்த தவறுகளே இந்திய அணிக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஹெடிங்லே மைதானத்தில் இந்திய அணி ஃபீல்டர்கள் பும்ராவின் உழைப்பை வீணடித்து வருவதோடு, அவரை துன்புறுத்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles