இந்தியனுக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாது என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை கொழும்பு மைதானத்தில் இரண்டு அணிகளும் மோதிக் கொள்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணி விளையாட விட்டாலும் இந்திய அணி கொழும்பு செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட மறுக்கவில்லை. அவர்கள் தரப்பில் இருந்துதான் மறுப்பு வந்திருக்கிறது. நாங்கள் விளையாட தயாராகவே இருக்கிறோம். எங்களுக்கு இதில் எந்தவித பிரச்சனையும் கிடையாது”
“அரசாங்கங்கள் இரண்டு அணிகளும் பொதுவான இடத்தில் விளையாடுவதற்கான இடத்தை முடிவு செய்தன. பிறகு ஐசிசி அட்டவணையை வெளியிட்டது. எங்களுக்கு முன்கூட்டியே விமான டிக்கெட் பதிவு செய்யப்பட்டு விட்டன. நாங்கள் டெல்லியில் நமிபியா அணிக்கு எதிராக விளையாடி முடித்துவிட்டு கொழும்பு செல்வோம். இந்த விஷயத்தில் நாங்கள் தெளிவான மனநிலையில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

