INDvsSA ODI.. முதல் மேட்ச் உடன் வெளியேறும் இந்திய வீரர்.. காயம் இல்லை ஆனா பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. காரணம் என்ன.?

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. கே எல் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் நடந்த டி20 போட்டி சமனில் முடிந்தது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு பின்னர் தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. முதலில் நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

- Advertisement -

ஜோனஸ்பர்க்கில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஷமி ஆகிய அனுபவ வீரர்கள் இந்தத் தொடரில் ஓய்வு பெற்றதை அடுத்து இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.

- Advertisement -

சாய் சுதர்சன் இந்த ஒருநாள் தொடரில் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார். மேலும் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் அணியில் இணைகின்றனர். ஸ்பின்னர்க்கு முக்கியத்துவம் கொண்ட இந்த ஆடுகளத்தில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேலின் பங்களிப்பு பெரிதளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணிக்கு மார்க்கம் கேப்டனாக களம் இறங்குகிறார். தொடரை வெல்லும் முனைப்பில் தென்ஆப்பிரிக்க அணி களமிறங்கும் என்று சந்தேகம் இல்லை. இந்திய அணியில் உலகக் கோப்பைக்கு பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இது. ஏற்கனவே காயம் காரணமாக டி20 தொடரில் விலகி இருந்த அவர், இன்று ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார்.

- Advertisement -

ஆனால் இவர் எஞ்சிய ஒருநாள் தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்று தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ கூறுகையில்
“17ம் தேதி நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய ஒரு நாள் போட்டிகளில் விளையாட மாட்டார்.

டெஸ்ட் தொடருக்கு தயாராக அவர் டெஸ்ட் அணியில் இணைய உள்ளார். அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்” என்று அறிவித்துள்ளது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விரைவில் வர உள்ளது. இந்திய அணி அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் வெல்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் விராட் கோலி உலக கோப்பைக்கு பிறகு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles