2018ல் இந்திய அணியில் கழற்றிவிட்டார்கள்.. அழுக கூடாது என்று என்ன செய்தேன் தெரியுமா? கருண் நாயர் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்டோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் வீரர் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

கருண் நாயர் பேட்டி

இந்த நிலையில் பயிற்சி போட்டியிலும் இரட்டை சதம் விளாசிய கருண் நாயருக்கு, இந்திய பிளேயிங் லெவனிலும் இடம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கருண் நாயர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் யாருமெ எனக்கு ஒப்பந்தம் கொடுக்க முன்வரவில்லை. 2018ஆம் ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் என்னால் விளையாட முடியும் என்று நம்பினேன்.

- Advertisement -

அந்த நேரத்தில் மனதளவில் வலிமையுடன் இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எப்படி இடம் மாறி சென்றேன் என்று தெரியவில்லை. அதன்பின் மீண்டும் முதலில் இருந்து தொடங்க சூழல் வந்தது. கால்பந்தில் சாம்பியன்ஸ் லீக் விளையாடிய பின், திடீரென ஒரு சாதாரண லீக் இல்லாத போட்டிகளில் விளையாடுவதை போல் இருந்தது.

- Advertisement -

யாருடன் பேசுவதென தெரியவில்லை

சில வீரர்கள் என்னிடம் வந்து கவுண்டி கிரிக்கெட்டுக்கு மேல் விளையாட திறமையுடன் இருக்கும் போது, இங்கு ஏன் சிக்கி கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளனர். கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், ஆக்ஸ்போர்ட் தெருக்களுக்கு சென்று கண்ணில் பட்ட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் வாங்க தொடங்கினேன். அழுக கூடாது என்று நினைத்தேன்.

அதுவரை ஒருநாளும் அவ்வளவு செலவு செய்ததில்லை. அந்த நேரத்தில் யாருடன் பேசுவது என்று தெரியவில்லை. என்ன பேசுவதென தெரியவில்லை. அதனால் கட்டுப்பாட்டின்றி சில பொருட்களை வாங்க தொடங்கிவிட்டேன். எனக்கு முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாடுவதில் மட்டுமே ஆர்வம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles