அவ்வளவுதான்.. தலையில் துண்டை போட்டுறலாம்.. 2வது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு.. 2 பேருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 5 சதங்கள் விளாசப்பட்டும், இங்கிலாந்து அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

2வது டெஸ்ட் போட்டி

இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகம் அடைந்தனர். சுப்மன் கில் கேப்டன்சியை விளாசி தள்ளியதோடு, இந்திய அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். சொந்த சாதனைகளுக்காக விளையாடாமல், இந்திய அணியின் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 2வது டெஸ்டில் விளையாட இந்திய அணி பர்மிங்ஹாம் புறப்பட்டது.

- Advertisement -

இதனிடையே 2வது டெஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விளையாடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் முதல் இன்னிங்சில் பும்ரா 24.4 ஓவர்களையும், 2வது இன்னிங்சில் 19 ஓவர்களையும் பும்ரா வீசி இருந்தார். 2வது இன்னிங்சில் பும்ராவால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. இதனால் பும்ராவுக்கு 2வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

யாருக்கு வாய்ப்பு?

பும்ராவுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். அதேபோல் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கும் செய்யவில்லை. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இந்த 2 மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாமல் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles